1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 2 ஏப்ரல் 2015 (14:14 IST)

வைகை எக்ஸ்பிரஸில் நீது சந்திராவுடன் நடித்த இனியா

மலையாளத்தில் வெளியான, நாதிரா கொல்லப்பட்ட ராத்திரி படத்தை தமிழில் வைகை எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் எடுக்கின்றனர்.
 

 
சுரேஷ் கோபி, காவ்யா மாதவன், சித்திக் ஆகியோர் மலையாளத்தில் நடித்திருந்தனர். காவ்யா மாதவனுக்கு இரு வேடங்கள்.
 
வைகை எக்ஸ்பிரஸில் சுரேஷ் கோபியின் போலீஸ் அதிகாரி வேடத்தை ஆர்கேயும், காவ்யா மாதவனின் வேடங்களை நீது சந்திராவும் செய்கின்றனர். கூடுதலாக இனியாவும் இருக்கிறார்.
 
இந்தப் படத்தில் ஸ்வப்னப்ரியா என்ற நடிகை வேடம் இனியாவுக்கு. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை ரயிலின் ஏசி கோச் போன்ற செட்டில் படமாக்கினர்.
 
ஷாஜி கைலாஷ் படத்தை இயக்கி வருகிறார்.