நயன்தாராவுக்கே முகமூடி போட்ட அதர்வா!


sivalingam| Last Modified புதன், 17 மே 2017 (23:20 IST)
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் 'இமைக்கா நொடிகள்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 'டிமாண்டி காலனி' இயக்குனர் அஜய்ஞானமுத்து இயக்கிவரும் இந்த படத்தில் அதர்வா முக்கிய கேரக்டரிலும், பாலிவுட் பிரமுகர் அனுராக் காஷ்யப் வில்லன் வேடத்திலும் நடித்து வருகின்றனர்.


 


இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப் ஆகிய மூவருமே கையில் முகமூடியை வைத்துள்ளனர். நயன்தாரா கையில் அதர்வா முகமூடியும், அதர்வா கையில் அனுராக் முகமூடியும், அனுராக் கையில் நயன்தாரா முகமூடியும் உள்ளது. மாறுபட்ட வடிவத்தில் அமைந்துள்ள இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் நாளை வெளியாகவுள்ளது. அந்த டீசரில் நயன்தாராவின் கவர்ச்சியான அதே நேரத்தில் போல்டான காட்சிகள் இருப்பதாகவும், படத்தின் வியாபாரத்தை எகிற வைக்கும் என்றும் கூறப்படுகிறது. நயன்தாராவின் முந்தைய படமான 'டோரா' பாக்ஸ் ஆபீஸ் வசூலில் திருப்தி தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :