நயன்தாரா படத்தின் பெயர் காரணம்

bala| Last Modified திங்கள், 21 நவம்பர் 2016 (11:23 IST)
கோபி நயினார் இயக்கத்தில் அறம் என்ற படத்தில் நடித்துள்ளார் நயன்தாரா. நாயகி மையப் படமான இதில் அவர் மாவட்ட கலெக்டர் கதாபாத்திரம் ஏற்றுள்ளார்.இந்தப் படத்துக்கு ஏன் அறம் என்று பெயர் வைக்கப்பட்டது? அதற்கான காரணத்தை படக்குழு அறிவித்துள்ளது.

கலெக்டரான நயன்தாரா கிராமத்து மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் கிடைக்க போராடுகிறார். ஆனால், அதற்கு பல்வேறு தடங்கல்கள் வருகின்றன. ஆனாலும், கடைசியில் அந்த தடங்கல்களைத் தாண்டி அறம் வெற்றி பெறுகிறது. அதனாலேயே இந்தப் படத்துக்கு அறம் என்று பெயர் வைக்கப்பட்டதாக காரணம் கூறியுள்ளனர்.

பொருத்தமான காரணம்.

 


இதில் மேலும் படிக்கவும் :