நயன்தாரா மீது மர்ம நபர்கள் தாக்குதல்...?

நயன்தாரா மீது மர்ம நபர்கள் தாக்குதல்...?


Sasikala| Last Updated: சனி, 2 ஏப்ரல் 2016 (11:19 IST)
நடிகை நயன்தாராவை அவரது வீட்டிற்குள் புகுந்து மர்ம நபர்கள் தாக்கியதாக தகவல் பரவி வருகிறது.

 
 
சமீபகாலம்வரை நட்சத்திர விடுதிகளில் தங்கி வந்த நயன்தாரா, கோயம்பேடு அருகில் ஒரு பிளாட் வாங்கி தற்போது அதில் குடியிருக்கிறார். இயக்குனர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் இணைந்து அந்த பிளாட்டை வாங்கியதாகவும், இருவரும் அங்கு அடிக்கடி சந்தித்து கொள்வதாகவும் கிசுகிசு உள்ளது.
 
இந்நிலையில், மர்ம நபர்கள் சிலர் பெரிய நிறுவனம் ஒன்றிலிருந்து வருவதாகக் கூறி, நயன்தாராவை வீடு புகுந்து தாக்கியதாக செய்தி பரவி வருகிறது. இந்த தாக்குதலில் முகம், கை, கால்கள் என அனைத்து இடங்களிலும் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.
 
நயன்தாரா தாக்கப்பட்டார் என்ற இந்த தகவல் கோடம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்


இதில் மேலும் படிக்கவும் :