நாகார்ஜூன் மகனுக்கு ரகசிய நிச்சயதார்த்தம்..!

Sasikala| Last Updated: ஞாயிறு, 11 டிசம்பர் 2016 (13:45 IST)
தெலுங்கு முன்னணி நடிகரான நாகார்ஜுனாவின் மூத்த மகன் நாகசைத்தன்யா திருமணம் அடுத்த வருடம் தொடக்கத்தில் முடிவு செய்திருக்கும் நிலையில், அவரது இளைய மகன் இளைய மகனான அகில் அக்கினேனியின் நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் ரகசியமாக நடைபெற்றுள்ளது.

 
இந்நிலையில் நாகார்ஜுனாவின் இளைய மகனான அகில் அக்கினேனி, ஸ்ரியா பூபால் என்பவரை காதலித்து வருவதாகவும், அவரையே திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் பரவின. இதனை ஒத்துக்கொண்ட நாகார்ஜுனா, கூடிய விரைவில் அகில் திருமணம் குறித்த அறிவிப்பை வெளிடுவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஹைதராபாத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் அகில்-ஸ்ரியா பூபால் நிச்சயதார்த்தம் ரகசியமாக நடைபெற்றுள்ளது. மிக நெருங்கிய உறவினர்கள் மற்றும் தென்னிந்தியாவின் முக்கிய திரை நட்சத்திரங்கள் மட்டுமே இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.
 
திருமணத்தை இத்தாலியில் நடத்த முடிவு செய்துள்ள அகில் மற்றும் ஸ்ரியா, 600 பேரை திருமணத்திற்கு அழைக்க உள்ளனராம். தெலுங்கு திரையுலகில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வரும் ஸ்ரியா பூபால், பெரும் தொழிலதிபர் ஜி.வி.கே ரெட்டியின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :