தொடர்புடைய செய்திகள்
- அடுத்தடுத்து தோல்விகள்… தயாரிப்பாளரின் கோரிக்கையை ஏற்று சம்பளத்தைக் குறைத்த விக்ரம்!
- ரஜினி - கமல் படத்தை இயக்கும் வாய்ப்பை மறுத்தாரா ப்ரதீப் ரங்கநாதன்?
- நான் விஜய்யின் தீவிர ரசிகை! கரூர் சம்பவம் குறித்து காஜல் அகர்வால் சொன்ன பதில்!
- புதுமுக இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கும் விக்ரம்… ப்ரோமோ வீடியோவோடு வெளியாகவுள்ள அறிவிப்பு!
- விக்ரம் நடிக்கும் படத்துக்கு இசையமைக்கும் அனிருத்..!
நூறாவது படத்தில் மீண்டும் இணைகிறதா நாகார்ஜுனா- தபு ஜோடி..!
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நாகார்ஜுனா. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தன்னுடைய 64 ஆவது வயதில் இப்போதும் ஹீரோவாகக் கலக்கி வருகிறார். சமீபத்தில் கூலி படத்தில் வில்லன் வேடத்தில் நடித்து கேலிகளுக்கு உள்ளானார்.
நாகார்ஜுனா ரட்சகன் படத்தின் மூலம் நேரடி தமிழ் படத்தில் அறிமுகமானார் . அந்த படம் வணிக்க ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் தற்போது கொண்டாடப்படும் ஒன்றாக உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நாகார்ஜுனா தன்னுடைய 100 ஆவது படத்தைத் தொடங்கினார்.
இந்த படத்தை தமிழ் இயக்குனர் ரா கார்த்திக் இயக்குகிறார். இந்த படத்தில் நாகார்ஜுனாவோடு தபு ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. 90 களில் நாகார்ஜுனா தபு ஜோடி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஜோடியாக இருந்தனர். அவர்களுக்குள் காதல் என்றெல்லாம் கிசுகிசுக்கள் பரவின என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
