ஞாயிறு, 16 நவம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 18 அக்டோபர் 2025 (09:21 IST)

நாகார்ஜுனாவின் நூறாவது படத்தில் இந்த ஹீரோயினும் இருக்கிறாரா?

நாகார்ஜுனாவின் நூறாவது படத்தில் இந்த ஹீரோயினும் இருக்கிறாரா?
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நாகார்ஜுனா. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தன்னுடைய 64 ஆவது வயதில் இப்போதும் ஹீரோவாகக் கலக்கி வருகிறார். சமீபத்தில் கூலி படத்தில் வில்லன் வேடத்தில் நடித்து கேலிகளுக்கு உள்ளானார்.

நாகார்ஜுனா ரட்சகன் படத்தின் மூலம் நேரடி தமிழ் படத்தில் அறிமுகமானார் . அந்த படம் வணிக்க ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் தற்போது கொண்டாடப்படும் ஒன்றாக உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நாகார்ஜுனா தன்னுடைய 100 ஆவது படத்தைத் தொடங்கினார்.

இந்த படத்தை தமிழ் இயக்குனர்  ரா கார்த்திக் இயக்குகிறார். இந்த படத்தில் நாகார்ஜுனாவோடு தபு ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. 90 களில் நாகார்ஜுனா தபு ஜோடி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஜோடியாக இருந்தனர். அவர்களுக்குள் காதல் என்றெல்லாம் கிசுகிசுக்கள் பரவின என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல இன்னொரு ஹீரோயினாக அனுஷ்காவும் இந்த படத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அனுஷ்காவும் நாகார்ஜுனாவுடன் இணைந்து பல ஹிட்களைக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் ஒரு அரசியல் கேங்ஸ்டர் படமாக உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.