வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: புதன், 11 மார்ச் 2015 (08:19 IST)

மிஷ்கினின் அடுத்தப்பட ஹீரோ சரத்குமார்

பிசாசு கமர்ஷியலாக ஹிட் ஆனபோதும் மிஷ்கின் இயக்கத்தில் படம் தயாரிக்க தயாரிப்பாளர்களும், நடிக்க முன்னணி நடிகர்களும் தயக்கம் காட்டுகின்றனர். அதனால் பிசாசுக்கு முன்பு சரத்குமாரை வைத்து இயக்க திட்டமிட்ட படத்தையே மிஷ்கின் அடுத்து தொடங்குகிறார்.

சரத்குமாரைப் பொறுத்தவரை 4 வருடங்களுக்குப் பிறகு சொந்த தயாரிப்பில் சண்டமாருதம் படத்தில் தனி ஹீரோவாக நடித்தார். படம் மிகச்சுமாராகவே போனது. அடுத்து தனி ஹீரோவாக வேண்டும் என்றால் அவர்தான் அடுத்தப் படத்தையும் தயாரித்தாக வேண்டும். அதற்கு மிஷ்கின் இயக்கத்தில் நடிப்பது எவ்வளவோ மேல்.

இவர்கள் இணையும் படம் வரும் ஜுன் மாதம் முதல் டேக்ஆஃப் ஆகும் என கூறப்படுகிறது.