முத்தையாவை ஜோக்கராக்கிய சூர்யா...?

முத்தையாவை ஜோக்கராக்கிய சூர்யா...?

Sasikala| Last Modified திங்கள், 19 செப்டம்பர் 2016 (17:37 IST)
எஸ் 3 படத்தை முடித்ததும் முத்தையா இயக்கத்தில் சூர்யா நடிப்பார் என்றனர். அப்படி சொல்லித்தான் முத்தையாவை ஒப்பந்தம் செய்தனர். ஆனால், கபாலி வெளியானதும், சூர்யாவை ரஞ்சித் இயக்குவார் என்றனர். ஈகோ மோதலில் ரஞ்சித்தும் வெளியேற்றப்பட்டார்.

 
திடீரென்று முத்தையாவுக்கு வில்லனாக உள்ளே வந்தார் விக்னேஷ் சிவன். இன்றைய தேதிவரை, எஸ் 3 -க்குப் பிறகு சூர்யாவை இயக்குகிறவர் அவர்தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
விக்னேஷ் சிவன் படத்துக்குப் பிறகு சூர்யாவை இயக்கும் வாய்ப்பு முத்தையாவுக்கு கிடைக்கும் என்று பார்த்தால் அதிலும் இடி. ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்துக்கு சூர்யா கால்ஷீட் தந்துள்ளார். இவர்கள்தான் ஜோக்கர் படத்தை தயாரித்தவர்கள். கார்த்தியின் காஷ்மோராவும் இவர்கள் தயாரிப்புதான்.
 
ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் படத்தை ராஜு முருகன் இயக்குவார், சூர்யா நடிப்பார் என்கின்றன உறுதி செய்யப்படாத தகவல்கள். அப்படியானால் முத்தையா...?
 
செய்தியின் தலைப்பை இன்னொருமுறை வாசிக்கவும்.


இதில் மேலும் படிக்கவும் :