மும்பைக்கு மூட்டை கட்டிய நடிகை


Cauveri Manickam| Last Modified வியாழன், 4 மே 2017 (15:11 IST)
பெல் இயக்குநரின் படம் மூலம் தமிழ் சினிமாவில் இடம்பிடித்து சென்னையில் செட்டில் ஆகிவிடலாம் என்ற எண்ணத்தில் இருந்த நடிகைக்கு, படம் தோல்வி அடைந்ததால் சென்னையை விட்டு மும்பைக்கு சென்றுவிட்டாராம். 

 

 
தமிழ் ரசிகர்களுக்குப் பிடித்துவிட்டால், தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள் என்று தெரியும். அதனால் தான், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வருவது போல, வண்டி வண்டியாக கோடம்பாக்கத்தில் வந்து இறங்குகிறார்கள் நடிகைகள். ரசிகனுக்குப் பிடித்தால், கோயில் கட்டி கூட கும்பிடுவான் என்பது குஷ்பூ விஷயத்தில் நிரூபணமான உண்மை.
 
அந்த ஆசையில்தான் பெல் இயக்குநரின் படத்தில் கமிட்டானார் அந்த நடிகை. அவருக்கு நன்றாக பாடவும் வரும் என்பதை, தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பாடிக் காட்டியும் அசத்தினார். ஆனாலும், படம் தோல்வி என்பதால் நடிகையைக் கண்டுகொள்ள ஆளில்லை. சென்னையிலேயே வீடு வாங்கி செட்டில் ஆகலாம் என்ற கனவுடன் வந்தவருக்கு, வாடகை வீடு எடுக்கக் கூட வாய்ப்பில்லை. ஒருவர் கூட அழைக்காததால், மூட்டையைக் கட்டிக்கொண்டு மும்பைக்கே கிளம்பிவிட்டாராம் நடிகை.


இதில் மேலும் படிக்கவும் :