தொடர்புடைய செய்திகள்
- பிபாஷா பாஸு ஆண்கள் போல உள்ளார்… கிண்டல் அடித்த மிருனாள் தாக்கூர்…!
- எனது பதவிகாலத்தில் 2800 நாய்களை கொண்டு புதைத்துள்ளேன்.. கர்நாடக எம்.எல்.சி சர்ச்சை பேச்சு..
- ஆளுனரிடம் பட்டம் வாங்க மறுத்த மாணவி திமுக பிரமுகரின் மனைவி.. விளம்பர ஸ்டண்டா?
- இந்த ஆண்டு பல பாடங்களைக் கற்றுக்கொண்டேன்… ஹன்சிகா பதிவால் மீண்டும் கிளம்பிய விவாகரத்து சர்ச்சை!
- துள்ளுவதோ இளமை படத்தில் கூட நடித்த நடிகருக்கு மருத்துவ உதவி செய்த தனுஷ்!
19 வயதில் பல முட்டாள்தனமான விஷயங்களைப் பேசிவிட்டேன் – பிபாஷா பாஸு உருவக் கேலிக்கு மிருனாள் வருத்தம்!
பாலிவுட் நடிகையான மிருனாள் தாக்கூர் சீதாராமம் திரைப்படம் மூலமாக தென்னிந்திய ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனார். தெலுங்கில் உருவான அந்த திரைப்படம் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஹிட் ஆகி ஆகியதால் ஒரே படத்தில் தென்னிந்தியா முழுவதும் பிரபலம் ஆனார்.
இந்நிலையில் பாலிவுட் முன்னணி நடிகையான பிபாஷா பாஸுவை அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் உருவகேலி செய்யும் விதமாகப் பேசிய வீடியோ இப்போது பரவி வருகிறது. அந்த வீடியோவில் “பிபாஷா பாஸுவின் தசைகள் ஆண்கள் போல வலுவாக உள்ளன. ஆண்களைப் போல இருக்கும் பெண்களை திருமணம் செய்துகொள்பவர்களுக்கு பிபாஷா பாஸு இருகிறார் ” எனப் பேசியிருந்தார். இந்த வீடியோ அவருக்கு எதிராக விமர்சனங்களை உருவாக்கியது.
இதற்குப் பதிலளித்த பிபாஷா பாஸு “வலிமையான பெண்கள் அனைவரையும் தூக்கி விடுவார்கள். அழகான பெண்களே உங்கள் தசைகளை வலிமையாக்கிக் கொள்ளுங்கள். அதுவும் பெண்களுக்கு அழகுதான். பெண்கள் உடல்ரீதியாக வலிமையாக இருக்கக் கூடாது என்ற முட்டாள்தனமாக சிந்தனையைத் தூக்கிப் போடுங்கள்” எனப் பதிலடி கொடுத்துள்ளார்.
இந்நிலையில் தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார் மிருனாள் தாக்கூர். அதில் “19 வயதில் நான் பல முட்டாள்தனமாக விஷயங்களைப் பேசியுள்ளேன். நான் நகைச்சுவையாக பேசியது அடுத்தவர்களைப் புண்படுத்தும் என்பது கூட தெரியவில்லை. அதற்காக இப்போது நான் வருந்துகிறேன். யாரையும் உடல் ரீதியாக அவமானப்படுத்துவது என் நோக்கமல்ல. அழகு எல்லா வடிவங்களிலும் உள்ளது என்பதை எனக்குக் காலம் சொல்லிக்கொடுத்துள்ளது” என வருத்தம் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
