1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. movies prodcued with low budget but gave profit

2026-ல் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி அதிக லாபத்தை கொடுத்த படங்களின் லிஸ்ட்!...

blast
ஒவ்வொரு வருடமும் தமிழ் சினிமாவில் 200க்கும் மேற்பட்ட படங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அப்படி தியேட்டரில் வெளியாகும் அந்த திரைப்படங்களில் 20 சதவீத படங்கள் மட்டுமே வெற்றி பெற்று தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்களுக்கு லாபத்தை கொடுக்கிறது.

பெரிய நடிகர்களை வைத்து சில நூறு கோடிக்கு மேல் செலவு செய்து நஷ்டத்தை சந்திக்கும் தயாரிப்பாளர்களும் உண்டு. 10 கோடி செலவில் பணத்தை எடுத்து அதை விட பல மடங்கு லாபத்தை பார்க்கும் தயாரிப்பாளர்களும் உண்டு. அந்த வகையில் 2026 தொடங்கி தற்போது வரை சின்ன பட்ஜெட்டில் உருவாகி அதிக லாபத்தை கொடுத்த திரைப்படங்களைப் பற்றி பார்ப்போம்.

சசிக்குமார், சிம்ரன் ஆகியோரை வைத்து டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை இயக்கிய அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடித்து 4 கோடி பட்ஜெட்டில் உருவான வித் லவ் திரைப்படம் 39 கோடி வசூல் செய்தது.

நடிகர் கருணாஸின் மகன் கென் இயக்கி நடித்து ரூ.8 கோடி பட்ஜெட்டில் உருவான யூத் திரைப்படம் 82 கோடி வசூலை அள்ளியது.

சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா முக்கிய வேடத்தில் நடித்து 10 கோடி பட்ஜெட்டில் உருவான தாய்க்கிழவி திரைப்படம் ரூ.81.7 கோடி வசூல் செய்தது.

இளம் இயக்குனர் சுபாஷ். கே. ராஜ் இயக்கத்தில் அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து 18 கோடி பட்ஜெட்டில் உருவான பிளாஸ்ட் திரைப்படம் 75 கோடி வசூல் செய்திருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
விஜய் சி.எம்.ஆயிட்டார்!.. எனக்கு வருத்தம்!.. சசிக்குமார் ஓப்பன்!...