மொட்டை ராஜேந்திரன் இவ்வளவு பெரிய குடிகாரரா? அதிர்ச்சியில் படக்குழுவினர்


sivalingam| Last Modified திங்கள், 12 ஜூன் 2017 (22:29 IST)
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகர் என்றால் அவர் மொட்டை ராஜேந்திரன் தான். குறிப்பாக அஜித்துடன் 'வேதாளம்', விஜய்யுடன் 'தெறி' ஆகிய படங்களில் நடித்த பின்னர் அவருடைய லெவலே மாறிவிட்டது.


 


இந்த நிலையில் 'தங்கரதம்' படத்தில் மொடாக்குடிகாரராக மொட்டை ராஜேந்திரன் நடித்துள்ளாராம். அசல் குடிகாரன் போலவே இந்த படத்தில் நடித்துள்ள மொட்டை ராஜேந்திரன் உண்மையில் குடிப்பதில்லையாம். இருந்தும் அவரது நடிப்பை பார்த்து 'தங்கரதம்' படக்குழுவினர் இன்ப அதிர்ச்சியில் மூழ்கினர்.

மேலும் இந்த படத்தில் நாயகனுக்கு இணையாக மொட்டை ராஜேந்திரனுக்கு இண்ட்ரோ பாடலும் உண்டாம். இந்த பாடலில் மொட்டை ராஜேந்திரன் நடனத்திலும் பட்டையை கிளப்பியுள்ளாராம். இந்த படம் மொட்டை ராஜேந்திரனுக்கு பெரிய பிரேக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :