வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : சனி, 2 ஏப்ரல் 2016 (10:22 IST)

அம்மா வேடங்களுக்கு ஆசைப்படும் ரஜினி ஹீரோயின்

அம்மா வேடங்களுக்கு ஆசைப்படும் ரஜினி ஹீரோயின்

எண்பதுகளில் சுமலதாவுக்கு தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் எக்கச்சக்க ரசிகர்கள். கரையெல்லாம் செண்பகப்பூ, ஒரு ஓடை நதியாகிறது போன்ற முக்கியமான படங்களில் நடித்தவர், ரஜினியுடன் முரட்டுகாளை, கழுகு போன்ற படங்களிலும் நடித்தார்.


 


மூன்று மொழிகளில் டாப்பில் இருந்தவர், கன்னட நடிகர் அம்பரீஷ் பூரியை திருமணம் செய்து கொண்டபின் நடிப்பிலிருந்து விலகினார்.
 
தற்போது எல்லா பழம்பெரும் நடிகைகளைப் போல் அம்மா வேடங்களில் நடித்து வருகிறார். கன்னட படங்களில் அழகான அம்மா தேவையென்றால், முதல் போன் சுமலதாவுக்குதான் செல்கிறது.
 
பழம் நினைவுகள்... தமிழிலும் நடிக்க சுமலதா ஆசைப்படுகிறார். நடிகர் என்றால் ரஜினியைப் போல் 60 வயதிலும் இருபது வயது பெண்ணுடன் டூயட் பாடலாம். நடிகைக்கு அது அனுமதியில்லையே... அம்மா வேடங்கள் கிடைத்தால் போதும் என்கிறார் சுமலதா.
 
எத்தனை நாளைக்குதான் சரண்யாவையே தமிழ் ரசிகர்கள் பார்ப்பது... சுமலதாவுக்கும் வாய்ப்பு கொடுக்கலாமே தமிழ்ப்பட இயக்குனர்கள்.