செவ்வாய், 17 பிப்ரவரி 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 29 நவம்பர் 2025 (09:49 IST)

தொடங்கியது சுந்தர் சி & நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 வியாபாரம்!

தொடங்கியது சுந்தர் சி & நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 வியாபாரம்!
சில ஆண்டுகள் முன்னர் ரிலிஸான மூக்குத்தி அம்மன் படம் ரசிகர்கள் மத்தியில்  மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் நயன்தாரா மூக்குத்தி அம்மனாகவும், ஆர் ஜே பாலாஜி மற்றும் ஊர்வசி உள்ளிட்டோர் மற்ற கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர். ஆர் ஜே பாலாஜியுடன் இணைந்து என் ஜி சரவணன் இயக்கியிருந்தார்.

இதையடுத்து தற்போது அதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் நயன்தாராவை வைத்து இரண்டாம் பாகத்தைத் தயாரிக்க, இயக்குனராக சுந்தர் சி ஒப்பந்தமாகியுள்ளார். சுந்தர் சி இயக்குனர் பொறுப்பை ஏற்றுள்ளதால் படத்தின் கமர்ஷியல் மதிப்பு உயர்ந்துள்ளது. இதனால் படத்தின் பட்ஜெட்டும் அதிகமாகியுள்ளது. 100 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து படத்தை உருவாக்கி வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளை எல்லாம் எடிட் செய்து அதை வைத்து தற்போது இந்தி டப்பிங் உரிமையை சுமார் 8 கோடி ரூபாய்க்கு முடித்துள்ளதாம் படக்குழு. அதே போல மற்ற வியாபாரங்களையும் தற்போது தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.