1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. meesaya murukku 2 movie total collection

மீசைய முறுக்கு 2 மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

மீசைய முறுக்கு 2
கடந்த 2017-ம் ஆண்டு வெளியான  மீசைய முறுக்கு  திரைப்படம் ஹிப்ஹாப் ஆதியின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படம். இசைத்துறையில் சாதிக்க நினைக்கும் ஒரு இளைஞனின் கனவு, குடும்பம், காதல், நட்பு என ஆதியின் வாழ்க்கையைத் தழுவிய அம்சங்களுடன் அந்தப் படம் உருவாகியிருந்தது.
 
ஹிப்ஹாப் ஆதி இயக்குநராக அறிமுகமான அந்தப் படத்தில் ஆத்மிகா, மறைந்த நடிகர் விவேக், விக்னேஷ்காந்த் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இளைஞர்களை கவர்ந்த கதை மற்றும் பாடல்கள் காரணமாக  மீசைய முறுக்கு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அந்த வெற்றிக்குப் பிறகே நடிகர் மற்றும் இயக்குநராக ஆதிக்கு தனி அடையாளம் உருவானது.
 
முதல் பாகம் வெற்றியை அடுத்து பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது  மீசைய முறுக்கு 2  மூலம் மீண்டும் அந்த பிராண்டுடன் ரசிகர்களை சந்தித்துள்ளார் ஹிப்ஹாப் ஆதி. ஆனால் இது முதல் பாகத்தின் கதையை அப்படியே தொடரும் படம் அல்ல. முதல் படம் ஒரு இசைக் கலைஞனின் வாழ்க்கையை மையப்படுத்திய நிலையில், இரண்டாம் பாகம் இசையையும் ஒரு கலைஞனின் வாழ்க்கையையும் வேறொரு கோணத்தில் அணுகுகிறது. நட்பு, இசை, இளம் தலைமுறையின் வாழ்க்கை ஆகியவற்றை மையப்படுத்திய விதம் குறிப்பாக Gen Z ரசிகர்களை கவர்ந்துள்ளது. பாடல்கள் மற்றும் இசைக் காட்சிகளின்போது திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடிய விதம் சமூக வலைதளங்களிலும் கவனம் பெற்றது.
 
 
படம் வெளியான ஆரம்பத்திலேயே வசூலில் வேகம் காட்டியது. வெளியான நான்கு நாட்களில் உலகளவில்  ரூ.51.3 கோடி வசூல் செய்ததாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது . இது ஹிப்ஹாப் ஆதியின் திரைப்பயணத்தில் முக்கியமான பாக்ஸ் ஆபீஸ் சாதனையாக பார்க்கப்பட்டது.
 
தற்போது படம் வெளியாகி மூன்று வாரங்கள் கடந்துள்ள நிலையில் மீசைய முறுக்கு 2  ரூ.53.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . வார இறுதியில் மீண்டும் சில இடங்களில் படம் ஹவுஸ்ஃபுல் ஆனதாகவும் கூறப்படுகிறது. மீசைய முறுக்கு மூலம் நடிகர் மற்றும் இயக்குநராக தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிய ஹிப்ஹாப் ஆதி, அதன்பிறகு பல படங்களில் நடித்திருந்தாலும் அனைத்து படங்களும் ஒரே அளவிலான வரவேற்பைப் பெறவில்லை. அந்த நிலையில் மீசைய முறுக்கு 2  அவருக்கு முக்கியமான வெற்றிப்படமாக அமைந்துள்ளது.
 
About Writer
சு. பாலகிருஷ்ணன்
18 ஆண்டுகள் தமிழ் முன்னணி  நாளிதழ்களின் டிஜிட்டல் செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.  அரசியல், பொழுதுபோக்கு செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.  .... Read More
அடுத்த கட்டுரையில்
தீபாவளிக்கு வெளியாகிறது ராமாயணா திரைப்படம்... டிக்கெட் முன்பதிவுகள் எப்போது?