வியாழன், 12 மார்ச் 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 25 அக்டோபர் 2025 (17:56 IST)

பயந்துகொண்டேதான் சென்சாருக்குப் போனேன்… பைசன் படம் குறித்து மாரி செல்வராஜ் பகிர்ந்த தகவல்!

பயந்துகொண்டேதான் சென்சாருக்குப் போனேன்… பைசன் படம் குறித்து மாரி செல்வராஜ் பகிர்ந்த தகவல்!
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் மற்றும் வாழை ஆகிய படங்களை அடுத்து மாரி செல்வராஜின் ஐந்தாவது படமாக ‘பைசன்’நேற்று ரிலீஸானது. இந்த படத்தில் துருவ் விக்ரம்மோடு அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, ரஜிஷா விஜயன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் அப்லாஸ் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த படத்தைத் தயாரித்துள்ளனர்.

இந்த படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி ரிலீஸாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. ஐந்து நாட்களில் உலகளவில் சுமார் 35 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது வாரத்தில் வெற்றிகரமாக ஓடிவரும் பைசன் படத்துக்கு வெவ்வேறு தளங்களில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் பட ரிலீஸுக்குப் பிறகு அவர் அளித்துள்ள ஒரு நேர்காணலில் சென்சார் பற்றி பேசியுள்ளார். அதில் “நான் பைசன் படத்தை எடுத்து முடித்துவிட்டு பயத்துடன் சென்சாருக்கு சென்றேன். என்னென்னக் காட்சிகளை நீக்க சொல்ல போகிறார்கள் என்ற அச்சத்தில் இருந்தேன். ஆனால் அவர்கள் மூன்று இடங்களில் மட்டும் ம்யூட் செய்ய சொல்லிவிட்டு படத்தைப் பாராட்டினார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.