வியாழன், 12 மார்ச் 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 13 பிப்ரவரி 2026 (13:12 IST)

சரித்திர ஃபேண்டஸி படம்!. பெரிய பட்ஜெட்!. தனுஷ் படம் பற்றி பேசும் மாரி செல்வராஜ்!..

mari selvaraj
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை, பைசன் ஆகிய திரைப்படங்களை இயக்கி கோலிவுட்டில் முன்னணி இயக்குனராக மாறியிருப்பவர் மாரி செல்வராஜ். தன்னுடைய சமூகம் சார்ந்த மக்கள் கடந்த பல வருடங்களாக சந்தித்த பல பிரச்சனைகளை அடிப்படையாக வைத்து திரைப்படங்களை உருவாக்கி வருகிறார் மாரி செல்வராஜ்..

இதற்காக அவர் கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொள்கிறார். ஆனால் ‘நான் இது போன்ற படங்களை தொடர்ந்து எடுப்பேன்’ என அவர் சொல்லி வருகிறார். பைசன் படத்திற்குபின் தனுசை வைத்து ஒரு திரைப்படத்தை மீண்டும் இயக்கவிருக்கிறார் மாரி செல்வராஜ்.

அந்த படம் பற்றி ஊடகம் ஒன்றில் பேசிய மாரி செல்வராஜ் ‘இது ஃபேண்டசி கலந்த சரித்திர திரைப்படம்.. சாதிய பிரச்சினைக்கு தனுஷ் ஒரு முடிவை கண்டுபிடிக்கிறார்.. அதுதான் படத்தின் கதை.. எனவே எனது முந்தைய படங்களில் இருந்த விஷயங்கள் இந்த படத்திலும் இருக்கும்..

அதே நேரம் என்னிடம் பேசிய தனுஷ் ‘உங்களுக்கும் எனக்கும் இது மிகப்பெரிய பட்ஜெட் படமாக இருக்க வேண்டும்’ என சொல்லியிருக்கிறார். எனவே படம் உருவாக காலதாமதம் இருக்கிறது என சொல்லியிருக்கிறார். தனுஷ் அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்திற்கு பின்னரே விஜய் மாரி செல்வராஜ் இயக்கத்டில் நடிப்பார் என தெரிகிறது.