1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Updated : செவ்வாய், 4 ஜூலை 2017 (13:53 IST)

சினிமாவை அழிக்கிறார் கமல்ஹாசன் - மன்சூர் அலிகான் காட்டம்

பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் தமிழ் சினிமாவை அழித்து வருகிறது என நடிகர் மன்சூர் அலிகான் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
கோலிசோடா படத்தில் நடித்துள்ள கிஷோர் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள படம் உறுதிகொள். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அதில் நடிகர் மன்சூர் அலிகான் கலந்து கொண்டு பேசியதாவது:
 
சினிமாவை மக்கள் திரையரங்கத்திற்கு வந்து பார்த்தால் மட்டுமே சினிமாத்துறை வளரும். சினிமாவை அழிக்க வெளியே இருந்து யாரும் வருவதில்லை. சினிமாக்காரர்கள்தான் சினிமாவை அழிக்கிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பங்கு பெறுகிறார். நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம் மாதிரி, கஷ்டப்படும் சினிமா கலைஞர்களுக்கு அந்த டிவி சேனல் ஏதோ படி அளக்கிறார்கள். அவங்க பிரச்சனை தீரட்டும். ஆனால், கமல்ஹாசன் மாதிரி ஒரு நடிகர், இந்த நிகழ்ச்சி மூலம் சினிமாவை அழிக்க முயல்வதாக எனக்குப்படுகிறது. 


 

 
இந்த நிகழ்ச்சி காரணமாக மாலை மற்றும் இரவு நேர காட்சிக்கு தியேட்டருக்கு மக்கள் வருவதில்லை. அதே நிகழ்ச்சியை அடுத்த நாள் காலையில் ஒளிபரப்புகிறார்கள். எனவே காலை காட்சிகளிலும் கலெக்‌ஷன் கட். 
 
நாளை கமல்ஹாசன் படம் வெளிவரும் போது, நடிகர் விஜய்யோ அல்லது அஜீத்தோ இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்தி, அவரது படத்தின் வசூல் பாதித்தால் என்னவாகும் என அவர் யோசிக்க வேண்டும்” என பேசினார்.
 
எந்த மேடையாக இருந்தாலும், அதிரடியாக பேசும் மன்சூர் அலிகான், கமல்ஹாசன் பற்றி இப்படி கருத்து தெரிவித்திருப்பது தமிழ் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.