பிரபல கிரிக்கெட் வீரருடன் உதயம் NH 4 நடிகைக்கு திருமணம் - தம்பதியின் அழகிய புகைப்படம்!

papiksha| Last Updated: திங்கள், 2 டிசம்பர் 2019 (15:34 IST)
இந்திய கிரிக்கெட் வீரர் மணீஷ் பாண்டே - நடிகை அஷ்ரிதா ஷெட்டி திருமண புகைப்படங்கள் 
நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளிவந்த "உதயம் என்.ஹெச்.4" படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி இளம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அஷ்ரிதா ஷெட்டி. அதையடுத்து ஒரு கன்னியும் 3 களவாணியும்’, ‘ இந்திரஜித்’ , நான் தான் சிவா போன்ற சில படங்களில் நடித்திருந்தாலும் உதயம் என்.ஹெச்.4 தான் அவ்ருக்கு ஒரு நல்ல அடையாளத்தை பெற்று தந்தது. அதிலும் குறிப்பாக அந்த படத்தில் இடம் பெற்ற "யாரோ இவன் யாரோ இவன்" என்ற பாடல் இன்று வரை பலருக்கும் ஃபேவரைட்டான பாடல். 
 
பின்னர் படங்களில் நடிப்பதிலிருந்து ஒதுங்கியிருந்த அஷ்ரிதா ஷெட்டிக்கு தற்போது 26 வயதாகிறது. இவர் இந்திய கிரிக்கெட் வீரர் மணீஷ் பாண்டே காதலித்து வந்துள்ளார்.  அஷ்ரிதாவுடனான தனது காதல் விவகாரத்தை மணீஷ் வெற்றிகரமாக ரகசியமாக வைத்திருந்தார். சமீபத்தில் தான் இருவீட்டாரும் திருமணம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். 
 
இந்நிலையில் இன்று மும்பையில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினார்கள் மற்றும் நண்பர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். தற்போது  திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :