மணிரத்னம் படத்திலிருந்து ஏன் விலகினேன்? நடிகர் பரபரப்பு விளக்கம்

Mahalakshmi| Last Modified புதன், 1 அக்டோபர் 2014 (14:58 IST)
மணிரத்னத்தின் புதிய படத்தில் நடிக்க பூஜா ஹெக்டே மறுத்தது மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்திப் படம் மொகஞ்சதாரோவுக்கு தொடர்ச்சியாக 6 மாதங்கள் கால்ஷீட் தந்துவிட்டதால் மணிரத்னம் பட வாய்ப்பை ஏற்க முடியவில்லை என்று அவர் விளக்கமளித்தார்.
இப்போது, படத்தின் நாயகனாக நடிக்க மறுத்த ராம் சரண் தேஜா விளக்கமளித்துள்ளார்.

நானும், மணிரத்னமும் ஒரு படம் குறித்து பேசினோம். தற்போது அந்தப் படத்தில் துல்கர் சல்மான் நடிக்கிறார். அப்படம் வெளிவந்தால் நான் ஏன் நடிக்க மறுத்தேன் என்பதற்கான காரணம் தெரியவரும். நான் நடிக்கும் படம் அனைத்துத் தரப்பினரையும் கவர வேண்டும் என்று நினைக்கிறேன். தயாரிப்பாளருக்கு நஷ்டத்தையும், எனக்கு விருதும் கிடைப்பதில் எனக்கு உடன்பாடில்லை என்று அவர் கூறினார்.
ராம் சரண் தேஜாவின் பேட்டியிலிருந்து மணிரத்னத்தின் படம் ராம் சரணின் கமர்ஷியல் மசாலாக்களிலிருந்து மாறுபட்டிருக்கும் என்பது உறுதியாகிறது.


இதில் மேலும் படிக்கவும் :