தொடர்புடைய செய்திகள்
- கமல்ஹாசனுக்காக எழுதிய கதையில் நடிக்கிறாரா சல்மான் கான்?
- ‘மகாராஜா’ இயக்குனர் நித்திலனை அழைத்துப் பாராட்டிய ஆஸ்கர் வென்ற திரைக்கதை எழுத்தாளர்!
- ஐயோ கடவுளே… எனக்கே இது புதிதாக இருக்கிறது- VJS படம் குறித்து ராதிகா ஆப்தே பதில்!
- நான் உண்மையாக இருப்பதால்தான்…. என் குரலை மட்டும் கேட்கிறேன் –சந்தீப்புக்கு தீபிகா படுகோன் சூசக பதில்!
- ‘தலைவன் தலைவி’ படத்துக்குப் பின்னர் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி- பாண்டிராஜ் கூட்டணி…!
சந்தீப் ரெட்டி vs தீபிகா படுகோன்… மணிரத்னம் ஆதரவு இவருக்குதான்!
சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கவுள்ள ஸ்பிரிட் படத்தில் இருந்து தீபிகா படுகோன் திடீரென விலகினார். இதற்குக் காரணம் அவர் ஒருநாளைக்கு 8 மணிக்கு மேல் பணிபுரியமாட்டேன் என்று சொன்னதும், 20 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதும்தான் என்று சொல்லப்பட்டது.
இதையடுத்து சந்தீப் ரெட்டியின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் “நான் ஒரு கதையை உங்களிடம் சொல்கிறேன் என்றால் 100 சதவீதம் உங்களை நம்புகிறேன். அதனால் அதை வெளியில் பகிரக்கூடாது என்பது எழுதப்படாத விதி. ஒரு இளம் நடிகரை அசிங்கப்படுத்துவது மற்றும் என் கதையில் மாற்றங்கள் செய்வது? இதுதான் உங்கள் பெண்ணியமா? ஒரு இயக்குனராக என் படைப்புகளுக்குப் பின்னால் நான் வருடக் கணக்கில் உழைப்பைப் போடுகிறேன். எனக்கு எல்லாமே சினிமாதான். உங்களுக்கு அது புரியவில்லை. எப்போதும் புரியவும் புரியாது.” என ஆவேசத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மணிரத்னம் “அவர் கேட்டுள்ளது நியாயமானது என்றே நான் நினைக்கிறேன். அப்படி ஒரு இடத்தில் இருப்பது மகிழ்ச்சி. இதை நான் ஒரு இயக்குனராகக் கவனத்தில் கொள்ளவேண்டும் என நினைக்கிறேன். அவர் கேட்பது நியாயமான விஷயம்தான். அதை நாம் புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு செயல்படவேண்டும்” எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
