மீண்டும் நாயகன் கூட்டணி?


Mahalakshmi| Last Updated: வெள்ளி, 5 ஜூன் 2015 (09:40 IST)
வதந்தியில் இனிப்பான வதந்திகளும் உண்டு. அதேபோன்றதொரு வதந்திதான் இதுவும்.
 
மணி ரத்னம் (இப்படி பிரித்துதான் ஓ காதல் கண்மணி படத்தின் டைட்டிலில் வருகிறது) அடுத்து நாகார்ஜுன், மகேஷ் பாபு, ஐஸ்வர்யா நடிக்கும் படத்தை தமிழ், தெலுங்கில் இயக்குகிறார் என பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், மணி ரத்னமும் கமலும் மீண்டும் இணைகிறார்கள்.

 

கதையெல்லாம்கூட தயாராக இருக்கிறது என்று ஒரு வதந்தி சில நாள்களாக கோடம்பாக்கத்தை வலம் வருகிறது. இவர்கள் இருவரும் இணைந்து 1987 -இல் நாயகன் படத்தை உருவாக்கினர். டைம் பத்திரிகையின் உலகின் சிறந்த 100 படங்கள் பட்டியலில் நாயகன் இடம்பிடித்தது.
 
அதேபோன்றதொரு சூழல் திரும்ப வருமா? 


இதில் மேலும் படிக்கவும் :