1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. mangatha 2 wont happen with ajith and venkat prabu

மங்காத்தா 2-வுக்கு வாய்ப்பே இல்ல!... விஷயம் தெரியாம பேசாதீங்க புரோ!...

mankatha
அஜித்தை வைத்து வெங்கட் பிரபு இயக்கிய திரைப்படம் மங்காத்தா. இந்த படம் இருவருக்குமே ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. ஆனால், அதன்பின் அஜித்தும் வெங்கட்பிரபுவும் இதுவரை இணையவில்லை. அஜித்தை வைத்து படமெடுக்கும் முயற்சியில் பல வருடங்களாக வெங்கட்பிரபு ஈடுபட்டும் அது நடக்கவில்லை.

இந்நிலையில்தான், விரைவில் அஜித்தை வைத்து வெங்கட்பிரபு மங்காத்தா 2 படத்தை எடுக்கவிருப்பதாக செய்திகள் பரவி வருகிறது. அஜித் ரசிகர்களும் இந்த செய்தியை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆனால், இது நடக்க வாய்ப்பில்லை என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.

மங்காத்தா படத்தை தயாரித்தது அழகிரின் மகன் துரை தயாநிதி. படத்தை வெளியிட்டது சன் பிக்சர்ஸ் நிறுவனம். மங்காத்தா படத்தின் நெகட்டிவ் உரிமை சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடமே இருக்கிறது. எனவே, மங்காத்தா தலைப்பை மீண்டும் பயன்படுத்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் என்.ஓ.சி கொடுக்கவேண்டும். அது நடக்க வாய்ப்பில்லை. அதேபோல், அஜித் 185 கோடி சம்பளம் கேட்பதால் அவரை வைத்து படமெடுக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாராக இல்லை. எனவே மங்காத்தா தலைப்பு மீண்டும் அஜித்துக்கு கிடைக்காது என சொல்லப்படுகிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
பல பஞ்சாயத்து இருக்கே!... விஸ்வநாத் & சன்ஸ் கல்லா கட்டுமா?!..