சென்னையில் தொடரும் மலையாள படத்தின் சாதனை


லெனின் அகத்தியநாடன்| Last Modified ஞாயிறு, 3 ஜனவரி 2016 (13:44 IST)
200 நாள்களை கடந்து மலையாளப் படம் ஒன்று சென்னையில் ஓடிக் கொண்டிருக்கிறது.
 
 
அதிக திரையரங்குகளில் படத்தை வெளியிட ஆரம்பித்த பிறகு ஹிட்டாகும் படங்கள் முப்பது நாள்கள் திரையரங்கில் ஓடுவதே அரிதாகிவிட்டது. ஐம்பது தினங்களை கடந்தால் அதிசயம். 100 நாள்கள் அபூர்வத்திலும் அபூர்வம்.
 
இப்படியொரு சூழலில் மலையாளப் படமான பிரேமம் 200 நாள்களை கடந்து சென்னையில் ஓடிக் கொண்டிருக்கிறது. முதலில் நான்கு காட்சிகள் ஓட்டப்பட்ட இந்தப் படம் பிறகு ஒரு காட்சியாக குறைக்கப்பட்டது. புத்தாண்டிலிருந்து இரண்டு காட்சிகளாக அதிகரித்துள்ளனர்.
 
மலையாளப் படம் என்றில்லை சமீபத்தில் எந்தத் தமிழ்ப் படமும் இதுபோல் ஓடியதில்லை என்பது முக்கியமானது.


இதில் மேலும் படிக்கவும் :