திங்கள், 19 ஜனவரி 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 14 நவம்பர் 2025 (08:34 IST)

விடாமுயற்சிப் படத்துக்குப் பிறகு அடுத்த பட வேலைகளைத் தொடங்கிய மகிழ் திருமேனி- ஹீரோ இவரா?

விடாமுயற்சிப் படத்துக்குப் பிறகு அடுத்த பட வேலைகளைத் தொடங்கிய மகிழ் திருமேனி- ஹீரோ இவரா?
தடையறத் தாக்க, தடம் மற்றும் கலகத் தலைவன் என அடுத்தடுத்து ஹிட் படங்கள் கொடுத்த மகிழ் திருமேனி அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார். அந்த படம் ஹாலிவுட் படமான ‘பிரேக்டவுன்’ படத்தின் ரீமேக் ஆகும். பல பிரச்சனைகளுக்கு மத்தியில் ரிலீஸான அந்த படம் படுதோல்வி படமாக அமைந்தது.

படத்தில் அஜித்தோடு, அர்ஜுன், ஆர்வ, த்ரிஷா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற அனிருத் இசையமைத்திருந்தார்.. மிலன் கலை இயக்குனராகப் பணியாற்றினார். இந்த படம் ரிலீஸாகிக் கிட்டத்தட்ட ஓராண்டு ஆகவுள்ள நிலையில் இன்னமும் மகிழ் திருமேனி அடுத்த படத்தை அறிவிக்கவில்லை.

இந்நிலையில் தற்போது அவரின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி விஜய் சேதுபதி மற்றும் சஞ்சய் தத் ஆகியோர் நடிக்கும் படத்தை மகிழ் இயக்கப் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை மும்பையைச் சேந்த மிராக்கிள் மூவிஸ் எனும் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.