“விஜய் சேதுபதியைப் பார்த்து பயந்தேன்” – மாதவன் ஓப்பன் டாக்


cauveri manickam| Last Modified சனி, 15 ஜூலை 2017 (13:12 IST)
தன்னுடன் நடித்த விஜய் சேதுபதியைப் பார்த்து பயந்ததாக மாதவன் தெரிவித்துள்ளார்.


 
 

மாதவன் – விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் ‘விக்ரம் வேதா’. புஷ்கர் – காயத்ரி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில், போலீஸாக மாதவனும், தாதாவாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். ஆனால், கதைப்படி இரண்டு பேருமே கெட்டவர்கள்தான். அடுத்த வாரம் இந்தப் படம் ரிலீஸாகிறது. அமிதாப் பச்சன், கமல் போன்ற பெரிய ஜாம்பவான்களுடன் நடித்தவர் மாதவன். ஆனால், அவரே விஜய் சேதுபதி பற்றி வியந்து பேசுகிறார்.

“கமலுக்கு அப்புறம் என்னைப் பயமுறுத்தியது விஜய் சேதுபதி தான். தான் என்ன பண்ணணும் என்பதில் தெளிவாகவும், ரொம்ப நம்பிக்கையாகவும் இருக்கார். சிங்கிள் ஷாட் நான் மிஸ் பண்ணாக்கூட, என்னை பீட் பண்ணி போய்கிட்டே இருக்கார். என்னுடைய கவனம் முழுக்க என்னுடைய ஸீனில் மட்டும்தான் இருக்கும். ஆனால், அவரோ மற்றவர்கள் நடிப்பதை ஸ்டூலில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்” என விஜய் சேதுபதி பற்றி வியந்து பேசியுள்ளார் மாதவன்.


இதில் மேலும் படிக்கவும் :