வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Modified: புதன், 4 நவம்பர் 2015 (14:05 IST)

மத கஜ ராஜா... நீ வருவியா ராசா...

ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் தயாரித்த மத கஜ ராஜா படத்தை ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். இடை தெரிய நிற்கும் வரலட்சுமியையும், அஞ்சலியையும் விஷால் இடையோடு அணைத்தபடி நிற்கும் புகைப்படம் அவ்வளவு எளிதில் மறக்கக் கூடியதா என்ன.


 


ஜெமினி ஃபிலிம் சர்க்யூட்டின் கடன் காரணமாக இதுவரை கரைசேராதிருந்த மத கஜ ராஜாவை டிசம்பர் 11 வெளியிட மும்முரமாக முயற்சிகள் நடக்கின்றன. அப்போ கடன்?

அதை ஜெமினி நிறுவனம் செட்டில் செய்துவிட்டதாம். பாயும் புலி பிளாப்பான நிலையில், மத கஜ ராஜாவின் வரவு விஷாலை தெம்பாக்கியிருக்கிறது.

தோழி வரலட்சுமியுடன் நடித்த படமாச்சே.