மாசு படத்தை முறியடித்த மாரி

Maari
Suresh| Last Updated: ஞாயிறு, 19 ஜூலை 2015 (14:36 IST)
சூர்யாவின் மாசு என்கிற மாசிலாமணி படத்தின் முதல்நாள் வசூலை அனாயாசமாக முறியடித்துள்ளது, தனுஷின் மாரி.

 

 
மாரி நன்றாக இல்லை என எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தாலும், படத்தின் முதல்நாள் வசூல் அபாரமாக உள்ளது.
 
ஏறக்குறைய 6.50 கோடிகளை தமிழகத்தில் முதல்நாள் மாரி வசூலித்துள்ளது. இது தனுஷின் சூப்பர்ஹிட் படமான வேலையில்லா பட்டதாரியின் முதல்நாள் வசூலைவிட சுமார் இரண்டு கோடிகள் அதிகம்.
 
சமீபத்தில் வெளியான சூர்யாவின் மாசு என்கிற மாசிலாமணியின் முதல்நாள் வசூலையும் இப்படம் முறியடித்துள்ளது. மாசு படத்தின் முதல்நாள் வசூல் 5.35 கோடிகள் மட்டுமே. 
 
நேற்று சனிக்கிழமையும் மாரி 6 கோடியை தாண்டி வசூலித்ததாகவும், இன்றும் படம் அதிக வசூலை பெறும் எனவும் திரையரங்கு உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :