1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Modified: வியாழன், 17 டிசம்பர் 2015 (15:38 IST)

லைக்கா தயாரிப்பில் ஜீ.வி.பிரகாஷ் - கயல் ஆனந்தியும் நடிக்கிறார்

ஜீ.வி.பிரகாஷ் நடித்த டார்லிங் படத்தை இயக்கியவர் சாம் ஆண்டன் அவர் மீண்டும் ஜீ.வி.பிரகாஷை வைத்து ஒரு படம் எடுக்கிறார். இந்தப் படத்தில் கயல் ஆனந்தி நாயகியாக நடிக்கிறார்.


 
 
ஜீ.பிரகாஷ் தற்போது புரூஸ்லீ, கடவுள் இருக்கிறான் குமாரு மற்றும் ராஜேஷ் இயக்கும் படம் என மூன்று படங்களில் கமிட்டாகியுள்ளார். நான்காவதாக சாம் ஆண்டன் இயக்கும் படம்.
 
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை எந்திரன் 2 படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. 2016 பொங்கலுக்கு படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக்கை வெளியிடுகின்றனர்.