1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Lokesh repect on karthi regarding his stature now

என்னது கார்த்தி சின்ன ஹீரோவா?... நெறியாளரின் கேள்விக்கு நச்சென்ற பதில் கொடுத்த லோகேஷ்!

அஜித்
சினிமாவில் ஒரு  வணிக இயக்குனராக லோகேஷ் கனகராஜ் அடைந்திருக்கும் உயரம் அளப்பரியது. தனது பயணத்தை "மாநகரம்" திரைப்படம் மூலம் தொடங்கினார். முன்னணி நடிகர்கள் இல்லாமல் திரைக்கதையின் பலத்தால் உருவாக்கப்பட்ட அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

அதன் பின்னர் லோகேஷின் சினிமா கிராஃப் ஏற்றத்தை மட்டும்தான் கண்டுள்ளது.  "கைதி", "மாஸ்டர்", "விக்ரம்", "லியோ" போன்ற வெற்றிப்படங்களை இயக்கி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தை இயக்க அந்த படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இதையடுத்து அவர் ‘கைதி 2’ படத்தை இயக்கவுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் “ரஜினி, விஜய், கமல் போன்ற பெரிய நடிகர்களை இயக்கிவிட்டு அடுத்து கார்த்தியோடு படம் பண்ணுவது சிரமமாக இல்லையா?” என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு லோகேஷ் “நான் யாரென்று நிரூபிக்கும் முன்னரே எனக்கு ‘கைதி’ என்ற பெரிய பட வாய்ப்பைக் கொடுத்தவர் கார்த்தி. அதனால் மற்ற எல்லா ஹீரோக்களையும் விட எனக்கு அவர்தான் பெரிய ஹீரோ” எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
நான் கோலியைக் காதலித்தேனா?... தமன்னா கொடுத்த பதில்!