சூப்பர் ஸ்டாரை சந்தித்த விஜய் பட இயக்குனர்: ‘தலைவர் 169’ படத்தை இயக்குவாரா?

rajini
Last Modified திங்கள், 2 டிசம்பர் 2019 (20:06 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிய ’தர்பார்’ படத்தில் நடித்து முடித்து விட்டு சிறுத்தை சிவா இயக்கும் படமொன்றில் நடிக்க உள்ளார். ‘தலைவர் 168’ என்று கூறப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் களத்தில் குதிக்க உள்ளதால் இன்னும் ஒரு படம் மட்டுமே நடிப்பார் என்றும் அதன் பிறகு முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்றும் கூறப்படுகிறது

எனவே அரசியல் களத்தில் இறங்குவதற்கு முன் ரஜினி நடிக்கும் கடைசி படத்தை இயக்குவது யாராக இருக்கலாம் என்ற கேள்வியை கோலிவுட் திரையுலகில் எழுந்து வந்தது. பல முன்னணி இயக்குனர்கள் இந்த பட்டியலில் இருந்து வரும் நிலையில் சற்று முன்னர் ’தளபதி 64’ பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்த் வீட்டில் அவரை சந்தித்து பேசியுள்ளார்
இந்த சந்திப்பு ஒரு சில நிமிடங்கள் நடைபெற்றதாகவும் இந்த சந்திப்பின் போது சில முக்கிய விஷயங்களை இருவரும் பரிமாறிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து ’தலைவர் 169’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக கோலிவுட்டில் ஒரு செய்தி மிக வேகமாக பரவி வருகிறது. இந்த செய்தி உண்மையானதா? என்பதை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்இதில் மேலும் படிக்கவும் :