மீண்டும் இணையும் அருண் - லோகேஷ் - அனிருத் கூட்டணி!... ரசிகர்களுக்கு ஃபுல் ட்ரீட்!..
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் டிசி. ஏற்கனவே ராக்கி, சாணிக்காயிதம், கேப்டன் மில்லர் போன்ற திரைப்படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார்.
பக்கா ராவான ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ள டிசி திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படம் தயாரிப்பு நிறுவனத்திற்கு லாபத்தை கொடுத்திருப்பதால் மீண்டும் அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி இணையவிருக்கிறதாம்.
இந்த படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார். அதேநேரம் அடுத்து அல்லு அர்ஜுனை வைத்து லோகேஷ் கனகராஜ் ஒரு திரைப்படத்தை இயக்கவிருக்கிறார். அந்தப் பட வேலைகள் முடிந்ததும் அவர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கதாநாயகனாக நடிப்பார் என சொல்லப்படுகிறது.