இப்போதைக்கு ஓடிடி ரிலீஸ் இல்லை… லோகா குறித்த வதந்திக்கு துல்கர் சல்மான் விளக்கம்!
கடந்த மாதம் ரிலீஸான லோகா படத்தின் ஜூரம் இன்னும் திரையரங்குகளில் இருந்து வெளியேறவில்லை. துல்கர் சல்மான் தயாரிப்பில் டாம்னிக் அருண் இயக்கத்தில் உருவான லோகா திரைப்படம் ஆகஸ்ட் 27 ஆம் தேதி ரிலீஸானது. கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த ஹாலிவுட்டில் வெளியாகும் vampire வகை சூப்பர் வுமன் வகைத் திரைப்படமாக உருவாகியுள்ளது.
முதலில் குறைவான திரைகளில் வெளியான இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று அதன் பின்னர் திரைகள் அதிகரிக்கப்பட்டு கேரளா தாண்டி பேன் இந்தியா அளவில் வெற்றிகரமாக ஓடிவருகிறது. வெளியாகி ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் இன்னும் கணிசமான திரையரங்குகளில் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் இந்த படம் விரைவில் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில் அதை மறுத்துள்ளார் துல்கர் சல்மான்.
இது சம்மந்தமான அவரது சமூகவலைதளப் பதிவில் “லோகா படம் இப்போதைக்கு ஓடிடியில் ரிலீஸ் ஆகாது. அது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குக் காத்திருங்கள். வதந்திகளை நம்பாதீர்கள்” எனக் கூறியுள்ளார்.