தொடர்புடைய செய்திகள்
- நான் மட்டும் இப்போது ஐபிஎல் தலைவராக இருந்திருந்தால் லக்னோ அணியை தடை செய்திருப்பேன்: லலித் மோடி
- என்னை தொடர்பு கொள்ளுங்கள்.. நாட்டை விட்டு ஓடிப்போன லலித் மோடி, காவ்யா மாறனுக்கு சொன்ன மெசேஜ்..
- இந்தியாவின் தேடப்படும் குற்றவாளி விஜய் மல்லையாவின் பிறந்த நாள் விழா.. லலித் மோடி பங்கேற்பு
- ஆர்சிபி அணி விற்பனைக்கு வருகிறதா? ஐபிஎல் அரங்கில் பெரும் பரபரப்பு!
- ஸ்ரீசாந்தை பளார் என அறைந்த ஹர்பஜன் சிங்! Unseen வீடியோவை வெளியிட்ட லலித் மோடி! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
பணத்திற்காக என்னிடம் பழகினாரா சுஷ்மிதா சென்.. லலித் மோடி விளக்கம்...!
தொழிலதிபர் லலித் மோடி மற்றும் பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் ஆகியோரின் காதல் உறவு கடந்த 2022ஆம் ஆண்டில் வெளியாகி இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியது. அப்போது சுஷ்மிதா சென் மீது வைக்கப்பட்ட "பணத்தாசை பிடித்தவர்" என்ற விமர்சனங்களை லலித் மோடி தற்போது முற்றிலும் மறுத்துள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி, சுஷ்மிதா சென் ஒரு சுயமரியாதை மிக்க, சொந்த உழைப்பால் உயர்ந்த பெண்மணி என்று புகழாரம் சூட்டியுள்ளார். "சுஷ்மிதாவிடம் இருக்கும் வைரங்களை விட பெரிய செல்வம் வேறு யாரிடமும் இல்லை.
நாங்கள் ஒன்றாக வெளியில் சென்றபோது எனது செலவுகள் அனைத்தையும் அவரே ஏற்றுக்கொண்டார். ஒருவகையில் நான் அவரிடம் காதலன் போலத்தான் இருந்தேன். எனவே, அவர் பணத்திற்காகப் பழகினார் என்று கூறுவது முற்றிலும் தவறு. உண்மையில் அவர் தங்கத்தை தேடுபவர் அல்ல, நான்தான் வைரத்தை தேடிப் போனேன், அவர்தான் அந்த வைரம்" என்று லலித் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2022இல் தங்களின் உறவை ட்விட்டரில் தற்செயலாக தான் பகிர்ந்ததாகவும், லண்டன் சென்றடையும் முன் அது இணையத்தையே உலுக்கியது என்றும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.
சுஷ்மிதாவின் இந்திய திரையுலக வாழ்க்கை மற்றும் தனது லண்டன் வாழ்க்கை காரணமாக ஏற்பட்ட தூர இடைவெளியே தங்களின் பிரிவுக்கு காரணம் என்றும், தங்களுக்குள் இப்போதும் பரஸ்பர மரியாதை நீடிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
