வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Updated : வியாழன், 28 மே 2015 (14:02 IST)

ஃபேஷன் டிஸைனிங் கிடையாதாம் ஆங்கில இலக்கியம் படிக்கும் லட்சுமி மேனன்

கல்யாணத்துக்கு முன் குழந்தைக்கு பெயர் பார்த்த கதைதான் இங்கும். பிளஸ் டூ ரிசல்ட் வந்த உடன், லட்சுமி மேனன் ஃபெயில் என தலைப்பு செய்தி வாசித்தார்கள். நான் படித்தது ஸ்டேட் கவர்மெண்ட் சிலபஸ் அல்ல, சென்ட்ரல் கவர்மெண்ட் என்று லட்சுமி மேனன் விளக்கம் தந்தார். மத்திய அரசின் சிபிஎஸ்இ ரிசல்ட் வந்தபோது எண்பது சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் வாங்கி லட்சுமி மேனன் பாசாகியிருந்தார்.
அடுத்து என்ன படிப்பது என்று லட்சுமி மேனன் முடிவு செய்யும் முன்பே சிலர், அவர் ஃபேஷன் டிஸைனிங் படிக்கிறார் என்று அவருக்கே தெரியாமல் அப்ளிகேஷன் போட்டனர். நடிக்கவும் வேண்டும், அவ்வப்போது கிளாஸுக்குப் போய் படிக்கவும் வேண்டும். அதற்கு தோதானது ஆங்கில இலக்கியம்தான் என்று முடிவு செய்துள்ளார் லட்சுமி மேனன். 
 
கொச்சியிலுள்ள முன்னணி கல்லூரிகளில் ஆங்கில இலக்கியத்துக்கான முயற்சியில் அவர் இறங்கியிருக்கிறார். சினிமா பெண் என்பதற்காக இல்லை, உங்கள் மதிப்பெண்களுக்காகவே ஸீட் கிடைக்கும்.