1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. kvn production and yash facing loss on toxic

டாக்சிக் படத்தில் இவ்ளோ கோடி நஷ்டமா?!.. தயாரிப்பாளர் தலையில் துண்டுதான்!..

toxic
KGF, KGF 2 ஆகிய திரைப்படங்கள் மூலம் இந்திய சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் யஷ். அந்த படத்திற்கு பின் கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் டாக்ஸிக் என்கிற திரைப்படத்தில் யஷ் நடித்திருந்தார். இந்த படத்தில் அவருடன் நயன்தாரா, ருக்மணி வசந்த், உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்..

இந்த திரைப்படம் கடந்த 26ம் தேதி உலகமெங்கும் வெளியானது. இந்தியாவில் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது. ஆனால் இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. இந்த படத்தின் கதை, திரைக்கதை நன்றாக இல்லை. படத்தில் எந்த சுவாரஸ்யமும் இல்லை.. படம் நன்றாக இல்லை என ரசிகர்கள் விமர்சனம் சொன்னார்கள்.. எனவே இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கவில்லை..

சுமார் 800 கோடி பட்ஜெட்டில் உருவான டாக்சிக் திரைப்படம் தற்போது வரை உலக அளவில் ரூ.300 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது. இதனால் படத்தை தயாரித்த கேவிஎன் நிறுவனத்திற்கு பல நூறு கோடிகள் நஷ்டம் ஏற்படும் என சொல்லப்படுகிறது.மேலும் இந்த படத்தை கே.விஎன் நிறுவனத்துடன் இணைந்து நடிகர் யஷ்ஷும் தயாரித்திருந்தார் அவர்கள் இந்த படத்தின் மூலம் அவருக்கு பல கோடிகள் நஷ்டம் என செய்திகள் வெளியாகியிருக்கிறது..
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
மனைவி, குழந்தையை பிரிஞ்சி அநாதையா வாழுறேன்!.. பிரதீப் ஆண்டனி உருக்கம்!...