தொடங்கியது கோலமாவு கோகிலா இந்தி ரீமேக் ஷுட்டிங்!

Last Modified புதன், 13 ஜனவரி 2021 (11:15 IST)

கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக் பணிகள் தொடங்கியுள்ளன.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவான திரைப்படம் கோலமாவு கோகிலா. அந்த படம் ஆங்கிலத்தில் வெளியான பிரேக்கிங் பேட் எனும் வெப் சீரிஸை தழுவி உருவாக்கப்பட்டு இருந்தது. மிகப்பெரிய வெற்றி பெற்ற அந்த திரைப்படம் நயன்தாராவின் மார்க்கெட் வேல்யுவை உயர்த்தியது.

இந்நிலையில் அந்த படத்தை இப்போது இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். நயன்தாரா கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க உள்ளார். பஞ்சாப்பில் நடப்பது போல கதையமைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு குறுகிய காலத்தில் நடத்தி முடிக்கப்பட உள்ளதாம். இந்த படத்தை பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய் தயாரிக்கிறார்.

நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டதை அடுத்து படப்பிடிப்பு தளப் புகைப்படத்தை புகைப்படக் குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்துக்கு குட்லக் ஜெர்ரி எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இதில் மேலும் படிக்கவும் :