வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (15:53 IST)

ஃபார் அடல்ஸ் ஒன்லி - கதம் கதமான பைசலின் கிம் கர்தர்ஷியான் கனவு

ஹாலிவுட் பிரபலம் கிம் கர்தர்ஷியானை வைத்து, ஃபார் அடல்ஸ் ஒன்லி என்ற படத்தை இயக்கப் போவதாக, சர்ச்சைக்குரிய இயக்குனர் ஃபைசல் சைஃப் அறிவித்திருந்தார். இந்தப் படத்தில் தனுஷ் நடிப்பதாக ஒரு வதந்தி கிளம்பி அடங்கியது நினைவிருக்கும்.
 

 
அப்போதே எழுதினோம். தனுஷ் மட்டுமில்லை கிம் கர்தர்ஷியானும் இந்தப் படத்தில் நடிக்கப் போவதில்லை என்று. அதுதான் நடந்திருக்கிறது. கூடுதலாக, இந்தப் படத்தையே இப்போது ட்ராப் செய்திருக்கிறார் ஃபைசல்.
 
ஃபார் அடல்ஸ் ஒன்லி போன்ற போல்டான டர்ட்டி படத்தை பார்க்கிற, அனுமதிக்கிற துணிச்சல் இன்னும் இந்தியர்களுக்கு வரவில்லை என்று காரணம் கூறியுள்ளார்.
 
அட, உங்களையே பேசவும் படமெடுக்கவும் இந்தியா அனுமதிக்கிறது. உங்களைவிடவா மோசமாகவும், போல்டாகவும் இருந்துவிடப் போகிறது உங்கப் படம்?