1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. ken karunas missed two movies because of vetri

எப்ப முடியும் ராஜன் வகையறா?!.. வெற்றிமாறன் மீது அப்செட்டில் கென் கருணாஸ்!..

vetrimaran
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்தவர் கென் கருணாஸ். அவரின் ஒரே மகன் கென். தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இருவரிடமும் உதவி இயக்குனராக வேலை பார்த்தவர் இவர். அதேபோல் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் மற்றும் தனுஷ் நடித்த வாத்தி ஆகிய திரைப்படங்களிலும் கென் கருணாஸ் நடித்திருந்தார். அதன்பின் அவரே கதை எழுதி, அவரே இயக்கி, அவரே ஹீரோவாக நடித்து வெளியான திரைப்படம் தான் யூத். இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது..

இந்த படத்திற்கு பின் மீண்டும் ஒரு திரைப்படத்தை தானே இயக்கி, நடிப்பது என்கிற முடிவில் கென் கருணாஸ் இருந்தார். அதேபோல் கட்டா குஸ்தி படத்தை இயக்கிய செல்ல அய்யாவு இயக்கத்திலும் ஒரு படத்தில் அவர் நடிக்கவிருந்தார். ஆனால் ராஜன் வகையறா என்கிற படத்தில் நடிப்பதற்காக வெற்றிமாறன் கூப்பிட்டதால் அங்கு சென்றார்..

ஆனால் அந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது வரை முடியவில்லை.. ஏனெனில் ஒருபக்கம் சிம்புவை வைத்து அரசன், ஒருபக்கம் கென் கருணாசை வைத்து ராஜன் வகையறா ஆகிய இரண்டு படங்களையும் வெற்றி மாறன் மாறி மாறி இயக்கி வருகிறார். எனவே படம் பாதியிலேயே நிற்பதாக சொல்லப்படுகிறது.. வெற்றிமாறன் எப்போது படத்தை முடிப்பார்? எப்போது நாம் அடுத்த படத்திற்கு செல்வோம்? என புலம்பி கொண்டிருக்கிறாராம் கென் கருணாஸ்..
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
டாக்சிக் படத்தில் இவ்ளோ கோடி நஷ்டமா?!.. தயாரிப்பாளர் தலையில் துண்டுதான்!..