கீர்த்தி சுரேஷின் "பென்குயின்" டீசர் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Papiksha Joseph| Last Updated: சனி, 6 ஜூன் 2020 (15:27 IST)

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பென்குயின்'. இந்தப் படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பெண்களை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு
கடந்த செப்டம்பர் 12ம் தேதி துவங்கியது. இதற்கிடையில் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால்
திரையரங்குகள் அனைத்தும் கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டுள்ளது. ஆதலால், ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படங்கள் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படங்கள் ஓடிடி ப்ளாட்பாரத்தில் ரிலீஸ் செய்யப்படுகிறது. பொன்மகள் வந்தாள் படத்தை தொடர்ந்து தற்போது "பென்குயின்" படமும் வருகிற ஜூன் 19 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் வருகிற ஜூன் 8 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படத்தின் தயாரிப்பளார் கார்த்திக் சுப்புராஜ் ட்விட்டரில் அறிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :