ஞாயிறு, 12 ஏப்ரல் 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By bala
Last Modified: வியாழன், 29 ஜனவரி 2026 (17:11 IST)

பல்சரில் ஆவியா? ‘கருப்பு பல்சர்’ படம் எப்படி இருக்கிறது? இதோ விமர்சனம்

பல்சரில் ஆவியா?  ‘கருப்பு பல்சர்’ படம் எப்படி இருக்கிறது? இதோ விமர்சனம்
அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் கருப்பு பல்சர். லப்பர் பந்து படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இந்த படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது. அட்டகத்தி தினேஷ் என்றாலே யதார்த்தமான நடிப்பு, பக்கத்து வீட்டுப் பையன் போன்ற தோற்றம், எளிதில் ரசிகர்களை கவரும் தன்மை என இதுதான் அவருடைய இயல்பு. அது அவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களுக்கும் உறுதுணையாக இருந்திருக்கின்றன.
 
அதன் அடிப்படையில் லப்பர் பந்து திரைப்படத்திற்கு பிறகு கருப்பு பல்சர் திரைப்படத்திலும் அது அவருக்கு உதவியாக இருந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த படத்தில் பியூரிஃபயர் வாட்டர் விற்பனை செய்து வரும் ஒரு இளைஞனாக அட்டகத்தி தினேஷ் நடித்திருக்கிறார். அவருக்கு பெண்பார்க்கும் படலம் நடக்கிறது. அதில் மேட்ரிமோனி மூலம் ஒரு பெண் அவருக்கு மணப்பெண்ணாக கிடைக்கிறார்.
 
இருவரும் அதிலிருந்து பழகுகிறார்கள். காதலிக்கிறார்கள். அதுவரை அட்டகத்தி தினேஷிடம் சாதாரண ஒரு பைக் மட்டும் தான் இருக்கிறது. ஆனால் தன்னிடம் ஒரு கருப்பு பல்சர் பைக் இருப்பதாக பொய் சொல்லி ஹீரோயினை இம்ப்ரஸ் செய்கிறார் அட்டகத்தி தினேஷ். அப்படித்தான் கதை ஆரம்பிக்கிறது. அதன் பிறகு அந்த கருப்பு பல்சர் பைக்கில் பல த்ரில்லிங்கான விஷயங்கள் நடக்கின்றன.
 
திடீரென அந்த பைக்கில் ஒரு ஜல்லிக்கட்டு காளை ஒன்றின் ஆவி புகுந்திருப்பது பெரிய வருகிறது. அதன் பின்னணி கதை என்ன? அந்த பைக் தினேஷிடம் எப்படி வந்தது? இதுதான் மீதி கதை. படத்தில் எப்பவும் போல தினேஷ் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் மாஸ் காட்டி இருக்கிறார். குறைவான பட்ஜெட்டில் நிறைவான கதையை தந்திருக்கிறார் இயக்குனர் முரளி சுரேஷ்.
 
இதுதான் இவருக்கு முதல் திரைப்படம். அதுமட்டுமல்ல இந்த படத்திற்கு இசையமைத்த இன்பராஜ் ராஜேந்திரனுக்கும் இதுதான் முதல் திரைப்படம்.  இதில் ஹீரோயினாக ரேஷ்மா நடித்திருக்கிறார். அதுபோக மன்சூர் அலிகான், சரவண சுப்பையா என பல பிரபலங்களும் நடித்துள்ளனர். நாளை திரையரங்குகளில் வெளியாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கின்றன.