லியோவை தாண்டுமா கருப்பு!.. விஜய் ரெக்கார்ட்டை தொட்ட சூர்யா!...
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா கருப்பண்ணசாமியாக நடித்திருக்கும் திரைப்படம் கருப்பு. இந்த படம் கடந்த மே மாதம் 15ம் தேதி வெளியானது. சிங்கம் படத்திற்கு பின் சூர்யாவுக்கு ஒரு சூப்பர் ஹிட் படம் அமையவில்லை. அந்த குறையை கருப்பு படம் போக்கியிருக்கிறது.
கருப்பு திரைப்படம் உலகம் முழுவதும் 300 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது. இதனையடுத்து இந்த படத்தின் ஒளிப்பதிவாளர், எடிட்டர் மற்றும் இசையமைப்பாளர் மூன்று பேருக்கும் 30 லட்சம் மதிப்புள்ள புதிய காரை சூர்யா பரிசளித்தார்.
இந்நிலையில்தான், கருப்பு திரைப்படம் விஜயின் மாஸ்டர் பட சாதனையை தொட்டுள்ளது. அதாவது தமிழ் சினிமாவில் ஒரு கோடி பேர் பார்த்த திரைப்படமாக மாஸ்டர் படம் இருக்கிறது. தற்போது அந்த இடத்தை கருப்பு பிடித்துள்ளது. கருப்பு படத்தையும் ஒரு கோடி பேர் பார்த்திருக்கிறார்கள். மாஸ்டருக்கு பின் விஜயின் லியோ படத்தை ஒரு கோடியே 7 லட்சம் பேர் பார்த்திருந்தார்கள். அந்த சாதனையை கருப்பு முறியடிக்குமா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.