1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. karuppu collection cro0ssed vijay biglil and varisu

வசூலில் பிகில், வாரிசு சாதனைகளைத் தகர்த்தெறிந்த சூர்யாவின் கருப்பு

karuppu
தமிழ் திரையுலகில் கடந்த மாதம் 14-ம் தேதி வெளியாகி, பாக்ஸ் ஆபீஸில் புயலைக் கிளப்பிக் கொண்டிருக்கும் திரைப்படம்  கருப்பு . சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான இத்திரைப்படம், வெளியானது முதல் இன்று வரை திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
 
இந்த படத்தின் வெற்றிக்கு பின்னால் ஒரு சுவாரஸ்யமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இந்தக் கதையை முதன்முதலில் தளபதி விஜய்யிடம் தான் கூறியுள்ளார். விஜய்க்கும் இந்தக் கதை மிகவும் பிடித்துப் போனதாம். தனது திரைப்பயணத்தின் கடைசிப் படமாக  கருப்பு  இருக்க வேண்டும் என்று ஆர்.ஜே. பாலாஜி விரும்பியுள்ளார். ஆனால், விஜய்யின் அரசியல் பயணம் மற்றும் நேரமின்மை காரணமாக அந்த வாய்ப்பு சூர்யாவிடம் சென்றது. இப்போது படம் பார்த்த ரசிகர்கள்,  விஜய் நடித்திருந்தால் மாஸாக இருந்திருக்கும், ஆனால் சூர்யா தன் நடிப்பால் மிரட்டியிருக்கிறார்  என சிலாகித்து வருகின்றனர்.
 
தென் மாவட்டங்களின் காவல் தெய்வமான கருப்பண்ணசாமியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம், வசூலில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
 
தற்போது வரை 310 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ள‘கருப்பு, நடிகர் விஜய்யின் முந்தைய சாதனைகளான பிகில்(ரூ.300 கோடி)  மற்றும் வாரிசு(ரூ.310 கோடி) படங்களின் மொத்த வசூலை முறியடித்து சாதனை படைத்துள்ளது. சூர்யாவின் சினிமா கேரியரிலேயே அதிக வசூல் செய்த படமாக கருப்பு  உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
திரிஷா, நட்டி நட்ராஜ் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இந்தப் படம், இன்றும் பல மாவட்டங்களில் ஹவுஸ்புல் காட்சிகளாகத் தொடர்கிறது. ‘கருப்பு’ படத்தின் இந்த அசுரத்தனமான வெற்றி, சூர்யாவின் அடுத்த எதிர்பார்ப்பான ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்திற்கு மிகப்பெரிய பிசினஸ் ஹைப்பை உருவாக்கியுள்ளது.
 
About Writer
பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரையில்
61 வயதில் திருமணம் செய்யும் அமீர்கான்.. மணப்பெண் சலூன் கடை ஓனர்.. திருமண தேதி என்ன?