1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. karthik subbaraj doing new movie with atharva

கார்த்திக் சுப்பாராஜின் புதிய படம்!.. அதர்வாவுடன் இணையும் உபேந்திரா!.

karthik
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தற்போது இண்டிபெண்டண்ட் என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் தேசிய அளவில் கவனம் பெறும் எனவும் பல விருதுகளை குவிக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

இந்த படத்திற்கு பின் ஒரு பக்கா கமர்சியல் மசாலா ஆக்சன் திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் அதர்வா அகதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். மேலும் கன்னடத்தில் பிரபல நடிகராக இருக்கும் உபேந்திரா இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்த படத்தை கார்த்திக் சுப்பாராஜின் சொந்த நிறுவனமான ஸ்டோன்பென்ச் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் இந்த மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் துவக்கத்தில் துவங்கும் என சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
எஸ்.கே. படம் டிராப்!.. மீண்டும் தன்னுடைய கேங்கை வைத்து படமெடுக்கும் விபி!...