1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. kara movie getting negative response from fans

கொஞ்சம் பெட்டரா பண்ணியிருக்கலாம்!. கர படத்துக்கு பரவும் நெகட்டிவ் விமர்சனங்கள்!.. கர கரை ஏறுமா?...

kara
போர்த்தொழில் என்கிற கிரைம் த்ரில்லர் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்து இன்று வெளியான திரைப்படம் கர. ஒரு கிராமத்து திரில்லர் படமாக கர உருவாகியிருக்கிறது இந்த படத்தில் மமிதா பைஜூ, கே.எஸ்.ரவிக்குமார், கருணாஸ், சுராஜ் வெஞ்சரமுடு, ஜெயராம் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.

ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படம் இன்று காலை வெளியான போது முதல் காட்சி பார்த்துட்டு பலரும் படம் நன்றாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டார்கள். ஆனால் போகப் போக கர படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது..

தனுஷ் நன்றாக நடித்திருக்கிறார்.. ஜிவி பிரகாஷ் நன்றாக பின்னணி இசை அமைத்திருக்கிறார்.. ஆனால் படம் நன்றாக இல்லை. படத்தில் கதை என ஒன்றுமில்.லை.. முதல் பாதி முழுவதும் அழுது கொண்டே இருக்கிறார்கள்..  இரண்டாம் பாதியில் தனுஷ் கொள்ளையடித்துக் கொண்டே இருக்கிறார்.. எதுவும் ரசிகர்களுக்கு ஒட்டவில்லை. இந்த கதையை எதற்காக படமாக்கினார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை. இன்னும் கொஞ்சம் நன்றாக எடுத்திருக்கலாம். திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.

 90களில் நடப்பது போல காட்டுகிறார்கள் ஆனால் அது எதற்கு என்பது தெரியவில்லை படத்தில் எந்த ரெஃபரன்ஸும் இல்லை.படம் சுத்த போர்’ என்றெல்லாம் பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அதேபோல், படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்களும் படம் பற்றி புலம்புவதை பார்க்க முடிகிறாது. எனவே கர திரைப்படம்  வெற்றியை பெறுமா இல்லையா என்பது இன்னும் இரண்டு நாட்களில் தெரிந்துவிடும்.
அடுத்த கட்டுரையில்
7 ஆண்டு காத்திருப்புக்கு விடிவுகாலம்: விரைவில் வெளியாகும் துருவ நட்சத்திரம்