1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 14 மார்ச் 2026 (18:39 IST)

கர பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்!.. வாயா என் கர சாமி பாடல் வீடியோ...

kara
போர்த்தொழில் படத்தை இயக்கியுள்ள விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ், மமிதா பைஜூ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் திரைப்படம்தான் கர. இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரித்திருக்கிறார்.. இட்லி கடை படத்திற்கு பின் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கி தற்போது முடிந்து விட்டது..

வருகிற ஏப்ரல் 30ம் தேதி இந்த படம் ரிலீஸ் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.  இந்நிலையில், இந்த படத்தில் இடம் பெற்ற கர படத்தின் பாடல் வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டிருக்கிறது.

இந்த பாடலை அந்தோணி தாசன் பாடியுள்ளார். பாடல் வீடியோவை பார்க்கும் போது கண்டிப்பாக கிராமத்து சஸ்பென்ஸ் ஆக்சன் திரில்லராக கர உருவாகியிருக்கும் என நம்பப்படுகிறது. சோளக் காட்டுக்குள் கையில் கத்தியுடன் தனுஷ் சில துரத்துவது போலவும் அவரை போலீசார் துரத்துவது போலவும், அவர்களை தனுஷ் தாக்குவது போலவும் காட்சிகள் உள்ளது. இதைப்பார்க்கும்போது தனுஷ் ஏற்கனவே நடித்த அசுரன் படம் நினைவுக்கு வருகிறது.