கபிலன் வைரமுத்து.... அப்பாவுக்கு தப்பாதவர்


Suresh| Last Updated: ஞாயிறு, 3 ஜனவரி 2016 (16:26 IST)
புத்தகமாவதற்கு சாத்தியமில்லாத எதையும் எழுதுவதில்லை என்ற கொள்கையுடையவர் வைரமுத்து.
 
அதாவது வீணாகக் கூடிய எதையும் அவர் செய்வதில்லை. பாட்டானாலும், பணமானாலும், விளம்பரமானாலும்.
 
அவரது அதே அடிச்சுட்டில் பயணிக்கிறார்கள் அவரது இரு மகன்களும்.
 
கபிலன் வைரமுத்து பேய்கள் ஜாக்கிரதை படத்துக்கு பாடல்கள் எழுதியிருந்தார். அதே படத்தில் விவேகாவும் பாடல் எழுதியிருந்தார்.

 

 
போஸ்டரில் கபிலனின் பெயர் முதலாவதாகவும், விவேகாவின் பெயர் இரண்டாவதாகவும் அச்சடிக்கப்பட்டிருந்தது.
 
இதனை பார்த்த கபிலன், விவேகா சீனியர், அவர் பெயரை முதலில் போடுங்கள் என்று படக்குழுவிடம் கூறிவிட்டு, அப்படியே இந்த செய்தியை பத்திரிகைகளுக்கும் அனுப்பி வைத்தார்.
 
தனது பெருந்தன்மையை விவேகா மட்டும் அறிந்தால் போதாதே, அகிலமே அறிய வேண்டுமே.


இதில் மேலும் படிக்கவும் :