வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Suresh
Last Updated : சனி, 12 செப்டம்பர் 2015 (10:45 IST)

இது கபாலியா இல்லை போலியா? - இணையத்தை கலக்கும் ரஜினி செல்பி

கபாலியில் இதுதான் ரஜினியோட கெட்டப் என்று ஆளுக்கொரு டிஸைனை வெளியிட்டிருக்கிறார்கள். ரஜினியே பார்த்தால் குழம்பிப் போவார். அத்தனை நேர்த்தி இந்தப் படங்களில்.

புகைப்படங்களில் எது நிஜம் எது போலி என்பதை கண்டுபிடிப்பதில், பாலிலிருந்து நீரை பிரித்தெடுக்கும் அன்னைப்பறவையாகிவிட்டார்கள் அனைவரும். அதனால், இந்தப் புகைப்படங்களால் நேற்றுவரை எந்தச் சிக்கலும் இல்லை.
 
அந்த அன்னப்பறவைகளுக்கே இனிமே கொடுப்பது போல் ஒரு புகைப்படம் இரண்டு தினங்களாக இணையத்த கலக்கிக் கொண்டிருக்கிறது. இதே இதுதான் அந்தப் படம்.


 

 
பார்க்க ரஜினி போலவும் இருக்கிறார், தாடி மீசையைப் பார்த்தால் போலி மாதிரியும் தெரிகிறார். உண்மை தெரியலையே மாதவா என்று மருள்கிறது ரசிக வட்டாரம்.
 
பாட்ஷா பாய்... கெட்டப்பில் இருக்கிறது நீங்களா இல்லை இது வெறும் செட்டப்பா? சொல்லுங்க பாட்ஷா பாய்.