ஞாயிறு, 7 டிசம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 17 அக்டோபர் 2025 (15:21 IST)

இரண்டு வாரத்தில் 700 கோடி ரூபாய் வசூல்… அசத்திய காந்தாரா 1!

இரண்டு வாரத்தில் 700 கோடி ரூபாய் வசூல்… அசத்திய காந்தாரா 1!
காந்தாரா படம் அடைந்த இமாலய வெற்றியை அடுத்து மூன்று ஆண்டுகள் உழைப்பில் 125 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான ‘காந்தாரா 1’ திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. படத்தில் ரிஷப் ஷெட்டியுடன் ருக்மிணி வசந்த் மற்றும் ஜெயராம் உள்ளிட்டவர்கள் நடிக்க ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

காந்தாரா கதைக்களம் நடக்கும் பல ஆண்டுகளுக்கு முன்னர் நடக்கும் கதைதான் இந்த பாகத்தில் சொல்லப்பட்டுள்ளது.  அதனால் அரங்க அமைப்பு முதல் ஆக்‌ஷன் காட்சிகள் வரை அந்த காலகட்டத்தில் எப்படி இருக்குமோ அப்படி பார்த்து பார்த்து செதுக்கியுள்ளனர் என்ற பாராட்டு படத்துக்குக் கிடைத்துள்ளது.

இந்த படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகிவிட்டபோதும் இன்னும் கணிசமான திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது. இந்நிலையில் 2 வாரத்தில் சுமார் 717. 50 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் தீபாவளிக்கு மூன்று படங்கள் ரிலீஸாகியுள்ள போதிலும் காந்தாரா 100 திரைகளுக்கு மேல் இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது.